17-வது ஜசெக தேசிய மாநாடு, கடந்த 2 ஆண்டுகளில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் விளைவால் ஜசெக, நம்பிக்கை கூட்டணி மற்றும் மலேசியா தற்போதைய சூழலில் பல சவால்களை எதிர்நோக்கி வருவதை நன்கு அறிந்திருக்கிறது. அதே நேரத்தில், சுதந்திரம், நீதி மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளால் வழிநடத்தப்படும் ஒரு ஜனநாயக, ஐக்கிய, நியாயமான மற்றும் நிலையான நாடாக மலேசியாவை மீடடெடுக்கும் முயற்சிகலில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்
அதனுடன், 17-வது ஜசெக தேசிய மாநாடு கட்சியின் எதிர்கால திசைக்கான வழிகாட்டியாக மத்திய செயற்குழுவால் முன்மொழியப்பட்ட பின்வரும் தீர்மானங்களை ஏற்று வழிநடத்த முடிவு செய்துள்ளது.
- மலேசியா கனவு
பத்தாண்டுகளுக்கு முன்பு, 8 ஜனவரி 2012 அன்று தேசிய மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஷா ஆலம் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி, 'மலேசியக் கனவு'க்கான ஜசெகவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்த, கட்சி கட்டாயமாக பின்பற்ற வேண்டியவை:
- கூட்டரசு அரசியலமைப்பை கூட்டமைப்பின் சட்டங்களை பாதுகாக்கவும், 1957 சுதந்திர அரசியலமைப்பு மற்றும் 1963 மலேசிய ஒப்பந்தத்தின் தேசப் பற்றை மதித்தல்.
- பேரரசர் (யாங் டி-பெர்டுவான் அகோங்) அவர்களை தேசிய தலைவராகவும், மாநிலங்களுக்கான அரசியலமைப்பு ஆட்சியாளர்களாகவும் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பு முடியாட்சி முறையைப் பாதுகாத்தல்.
- மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் சிறப்புச் சலுகையை பேணுவதுடன், கூட்டாட்சி அரசியலமைப்பின் 153 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இனங்கள் மற்றும் சமூகங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல்.
- கூட்டாட்சி அரசியலமைப்பின் 3 மற்றும் 11 வது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கூட்டாட்சி மதமாக இஸ்லாத்தின் சிறப்பு சலுகையை பாதுகாத்தல். அதே போல் மற்ற மதங்களின் சுதந்திரத்தையும் அமைதியையும் பேணிக்காத்தல்.
- மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 152-வது பிரிவின்படி மலாய் மொழியை தேசிய மொழியாகக் கௌரவப்படுத்துவதுடன், பிற சமூகத்தினர் அந்தந்த மொழிகளைப் பேசவும், கற்பிக்கவும், கற்கவும் உரிமைகளை அங்கீகரித்து பாதுகாத்தல்.
- 1963 மலேசியா ஒப்பந்தத்தில் சம பங்காளித்துவ உணர்வை மேம்படுத்துவதோடு, சபா மற்றும் சரவாக் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுதல்.
- சிவில் அரசியல் உரிமைகள் மற்றும் நிறுவன சீர்திருத்தம்
அனைத்து மலேசியர்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் ஐக்கிய மலேசியாவுக்கான ஜசெகவின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக அமைகிறது என்பதை மீண்டும் வலியுறுத்தும் வகையில், ஜசெக கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை:
- பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம், சங்க சுதந்திரம் மற்றும் வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட கூட்டாட்சி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்துதல்.
- ஒருவர் பாலினம், தோல் நிறம், மதம் அல்லது அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படாமல், ஒருவரின் தன்மை மற்றும் வேலையின் அடிப்படையில் நியாயமான மற்றும் சமத்துவமான மலேசிய சமுதாயத்தை உருவாக்க மற்றும் மேம்படுத்துவதைத் தொடர வழிவகை செய்தல்.
- மலேசியர்களின் உரிமைகளை மீறும் கொடூரமான மற்றும் பிற்போக்குத்தனமான சட்டங்களை திரும்பப் பெற/அழிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கையிடுதல்.
- ஜனநாயகத்திற்கான இன்றியமையாத தேவையாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான ஜசெகவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தவும் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் வாக்களிக்கும் உரிமைக்கான தடைகளை அகற்றவும் வலியுறுத்தல்.
- மலேசியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தங்களை அங்கீகரிப்பதில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வெற்றிக்கு இணங்க, 18 முதல் 20 வயதுடையவர்கள் மற்றும் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் மீது குறிப்பிட்ட கவனம் செலுத்தி, அவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.
- ஜனநாயகம் மற்றும் தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், கட்சித் தாவல்என்ற கேவலமான நடைமுறையை முற்றிலுமாக ஒழிக்க, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைத்து, அதைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்.
- கோவிட்-19: பின்னடைவை உருவாக்குதல் மற்றும் சமூகத்தை மீட்டெடுத்தல்
கோவிட்-19 நெருக்கடிக்குப் பிறகு மலேசியாவை மீண்டும் கட்டியெழுப்பும் பணிக்கு சமூகம் தழுவிய மற்றும் அரசாங்க அளவிலான அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்து, ஜசெக பின்பற்ற வேண்டியவை:
- கோவிட்-19 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளில் மலேசியா கோவிட் இறுதிக்கட்ட மீட்பு நடவடிக்கையில் இருப்பதால், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு, கண்காணித்தல், சரிபார்ப்பு மற்றும் சமநிலையை தொடர்ந்து வழங்குதல்.
- நாடு முழுமையாக மீண்டுவரும் வரை, மலேசிய அரசாங்கம் ஏதேனும் புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் அல்லது பயன்பாடுகள் அல்லது பிற தேவைகளுக்கான வரிகள் மற்றும் கட்டணங்களை அதிகரிக்கும் முயற்சிகளை நிராகரிகத்தல்.
- அனைத்து மலேசியர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க RM3 பில்லியன் நிலையான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக உருவாக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்லுத்தல்.
- உள்ளூர் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நெருக்கடியில் இருந்து மீள உதவுவதற்கு பணம் மற்றும் நிதி வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தல்.
- 21-ஆம் நூற்றாண்டின் சுகாதாரப் பாதுகாப்பின் சவால்களை சமாளிக்க பொது சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பூர்த்தி செய்வதற்கும் வலுப்படுத்துவதற்கும் கொள்கைகளை ஊக்குவித்தல். நவீன மருத்துவமனைகள், கிளினிக்குகள், மொபைல் கிளினிக்குகள் மற்றும் மிக முக்கியமாக - சுகாதார நிபுணர்கள் ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரிப்பது இதில் அடங்கும். மேலும், அரசாங்க ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் நிரந்தர பதவிகளில் நியமிக்ககப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜசெக ஆதரிக்கிறது.
- ஊழலை முழுமையாக எதிர்த்துப் போராட்டம்
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட ஊழல் புலனாய்வு குறியீட்டில் (சிபிஐ) மலேசியாவின் நிலைப்பாட்டை கவனத்தில் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊழல் குறைந்து வருவதையும், நமது சமூகத்தில் ஊழல் புற்றுநோயாக மாறியுள்ளது என்பதையும் உணர்ந்து, ஜசெக பின்பற்ற வேண்டியவை:
- மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) நாடாளுமன்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தல்.
- எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி ராஜினாமா செய்வதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதோடு அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையைத் தொடங்க வேண்டும்.
- 1எம்டிபி தொடர்பான நியூயார்க்கில் உள்ள ரோஜர் இங்கின் வழக்கு விசாரணையில் வெளிவந்த தகவல்கள் மற்றும் வெளிப்பாடுகளை மலேசிய அதிகாரிகள் விசாரணை செய்து இந்த பெரிய ஊழலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
- கொள்ளைக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மீது வழக்குத் தொடரும் சட்டச் செயல்பாட்டில் தலையிடுவதற்கான எந்த அழுத்தத்தையும் நிராகரித்து, குற்றவாளிகள் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திடம் கண்டிப்புடன் முன்வைத்தல்.
- 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரம்
பொருளாதாரத் துறை ஒரு சிலருக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துதல்; திறமையின் அடிப்படையில் வணிகம் நன்றாகச் செயல்பட வேண்டும் என்றாலும், இரக்கமுள்ள சமூகம் முதலாளித்துவ தாக்குதல்களில் இருந்து மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க வேண்டும், ஜசெக பின்பற்ற வேண்டியவை:
- அனைத்து மலேசியர்களுக்கும் கண்ணியமான வேலைவாய்ப்பை உருவாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பாதுகாக்கும் கொள்கைகளை நிலைநிறுத்துதல். பக்காத்தான் ஹராப்பானின் 'மலேசியா கெர்ஜா' (MalaysiaKerja) கொள்கை, இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட மலேசியர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் வேலைகளைப் பாதுகாக்கவும் வலியுறுத்தல்.
- ஊதியம், ஆட்சேர்ப்பு ஊக்குவிப்புகள் மற்றும் மிகவும் மனிதாபிமான மற்றும் வெளிப்படையான வெளிநாட்டு ஆட்சேர்ப்பு கொள்கை மூலம் பல வணிகங்கள் எதிர்கொள்ளும் தொழிலாளர் பற்றாக்குறையை களைந்து, நிறுவன சீர்திருத்தத்தை ஊக்குவித்தல்.
- தொழில்துறை புரட்சி 4.0 மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, அதே நேரத்தில் 'உலக கடைத் தளமாக' இருந்து 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்திற்கான கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியின் மையமாக மாற்றுதல்.
- 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதார சவால்களுக்கு ஏற்ப கல்வியை உருவாக்கும் நோக்கில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் சாதகமான STEM மற்றும் TVET கல்வியை மேம்படுத்துதல்.
- வெவ்வேறு சமூக வகுப்புகளுக்கு இடையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள சமநிலையான வளர்ச்சியை உறுதி செய்தல். பொருளாதார வளர்ச்சி என்பது சமமான பொருளாதாரப் பகிர்வைக் குறிக்காது என்பதை உணர்ந்துகொள்வதோடு, மேலும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க, செல்வ இடைவெளியைக் குறைக்கும் திறன் கொண்ட கொள்கைகளை அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும்.
- பாலினம், இனம், மதம் அல்லது அரசியல் சித்தாந்தத்திற்கு எதிராக பாகுபாடு இல்லாமல், தேவைப்படுபவர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய, முறையான, நியாயமான மற்றும் பயனுள்ள நலத்திட்டங்கள் மூலம் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்தல்.
- வேலைகள், வணிகங்கள் மற்றும் பொருளாதார வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற, ஒரு முறை உதவி என்ற பழைய முறையிலிருந்து வழக்கமான தொடர் நிதி உதவிக்கு மாறுதல். ‘ஒரே முறை’ உதவி என்ற பழைய முறையானது, சாதாரண தொழிலாளர்கள் மற்றும் நிதிச் சிக்கல்களை அனுபவிக்கும் மலேசியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியாத நிதி உதவியாக விளங்கும்.
- அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உணவு மற்றும் பொருட்களின் விலைகளை மதிப்பாய்வு செய்தல், குறிப்பாக 1.6 மில்லியன் வணிகங்கள் மற்றும் தொழில்களுக்கான மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்துதல்.
- பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாட்டை களைதல்
ஒவ்வொரு ஆண்டும், மலேசியாவில் பெண்கள் சமூக ஈடுபாட்டின் பரந்த அளவிலான சமத்துவத்தை நோக்கி நகர்கின்றனர், குறிப்பாக கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியலில் பங்கேற்பது ஆகும். ஆனால் மலேசியப் பெண்களுக்கு பாலின சமநிலை மற்றும் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த இன்னும் நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஜசெக பின்பற்ற வேண்டியவை:
- பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும், சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பாகுபாடுகளையும் களைய வேண்டும்.
- அனைத்து மட்டங்களிலும் கொள்கை மற்றும் முடிவெடுப்பதில் சமநிலையான பாலின பங்கேற்பதன் மூலம் பாலினத்தை முதன்மைப்படுத்துதல். ஜசெக தேசிய மாநாடு, கட்சியின் உயர்மட்ட தலைமைத்துவத்தில் பாலினத்தை முக்கியப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, கட்சியின் மத்திய செயற்குழுவில் (சிஇசி) குறைந்தது 30% பெண் உறுப்பினர்களை உறுதி செய்வதற்கான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் மற்றும் எந்தவிதமான வாய்மொழி அல்லது உடல்ரீதியான துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகம் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். அந்த நோக்கத்திற்காக, ஜசெக நீண்ட கால தாமதமான பாலியல் துன்புறுத்தல் மசோதாவை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. இது ஒரு பெண்கள் வழக்கறிஞர் குழுவால் முன்மொழியப்பட்டதோடு, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கீழ் முதலில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இளைஞர்களை ஊக்குவித்தல்
அனைத்து துறைகளிலும் நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நமது நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வலுவான மற்றும் ஒருங்கிணைந்த சக்தி கொண்ட ஒரு தலைமுறையை நாம் உருவாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான ஜசெகவின் நிகழ்ச்சி நிரலின் மையத்தில் இளைஞர்களின் அதிகாரம் விளங்குகிறது. எனவே ஜசெக பின்பற்ற வேண்டியவை:
- அனைத்து துறைகளிலும் நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நமது நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வலுவான மற்றும் ஒருங்கிணைந்த சக்தி கொண்ட ஒரு தலைமுறையை நாம் உருவாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான ஜசெகவின் நிகழ்ச்சி நிரலின் மையத்தில் இளைஞர்களின் அதிகாரம் விளங்குகிறது. எனவே ஜசெக பின்பற்ற வேண்டியவை:
- சமச்சீர் கல்விக் கொள்கைகள், மலிவு விலை வீடுகள், இளைஞர்களுக்கு சிறந்த தரமான வேலைவாய்ப்பை வழங்குவதற்கான கொள்கைகள் மற்றும் முறைசாரா பொருளாதாரத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறந்த சமூகப் பாதுகாப்பை வழங்குதல் உள்ளிட்ட இளைஞர்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை ஊக்குவித்தல்.
- அதிவேகமாக வளரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஆக்கப்பூர்வமாக அணுகவும், ஈடுபடவும், கேட்கவும் மற்றும் மிக முக்கியமாக நமது நாட்டைக் கட்டியெழுப்புவதில் அதிக இளைஞர்களை தீவிரமாக ஈடுபட வைக்க வேண்டும். இது நமது சமூகத்தில் பல்வேறு மட்டங்களில் உள்ள தலைவர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும் அதிக இளைஞர்களை ஊக்குவிக்கும்.
- சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் விளையாட்டுகள் உட்பட இளைஞர்களிடையே அதிக விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவித்தல். சர்வதேச அளவில் உட்பட, தொடர்ந்து செழித்து, சிறந்து விளங்கும் நம் விளையாட்டு வீரர்களை மேம்படுத்த வேண்டும். மேலும், நமது நாட்டிற்குப் பங்களிப்பு வழங்கிய தற்போதைய விளையாட்டு வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு நியாயமான சேவை அளிப்பதை உறுதி செய்தல்.
- நமது பூமியைப் பாதுகாத்தல்
மலேசியாவின் பல மாநிலங்களில் சமீபத்தில் அதிகரித்துள்ள சம்பவங்கள் வெள்ளம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வானிலை வடிவங்களின் விளைவுகளை வெளிப்படுத்துகிறது. எனவே, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மலேசியா அறிந்திருக்க வேண்டும். மேலும், நிலையான வளர்ச்சிக்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். எனவே, ஜசெக பின்பற்ற வேண்டியவை:
- கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவதோடு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நேரடியாக நிர்வகிப்பவர்கள் மட்டுமின்றி அனைத்து அரசு நிறுவனங்களிலும் காலநிலை மாற்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
- செயல்திறன் ஆற்றல் ஒப்பந்தங்கள், சோலார் குத்தகை திட்டங்கள் மற்றும் எரிசக்தி கழிவுகள் போன்ற பசுமையான திட்டங்களை முன்னெடுத்தல்.
- பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் இடமாக மலேசியா மாறுவதைத் தடுத்தல்.
- நிலையான வனக் கொள்கையை நோக்கி தேசிய வனச் சட்டத்தில் திருத்தங்களை வலியுறுத்துதல். அவை: காடழிப்புச் சிக்கலைத் தீர்க்க மரம் வெட்டும் விகிதத்தைக் குறைத்தல் மற்றும் காடுகளை மீளுருவாக்கம் செய்வதற்கு முன்னுரிமை அளித்தல்.
- சீர்திருத்த மேம்பாட்டு சட்டங்கள் மற்றும் கொள்கைகள், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கருத்தில் கொண்டு, நிலையான மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் நகரங்களை உருவாக்குதல்.
- மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு அதிகாரமளித்தல்
சமீப காலங்களில் தனி மாநிலத் தேர்தல்கள் வழங்கப்பட்ட நிலையில், மாநில அளவில் வளர்ந்து வரும் அரசியல் முக்கியத்துவத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஜசெக பின்பற்ற வேண்டியவை:
- குறிப்பாக சுகாதாரம், போக்குவரத்து மற்றும் கல்வி விஷயங்களில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிரதேசத்தின் வருவாய் உருவாக்கும் திறனை அதிகரிக்க கூட்டமைப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிக சமமான வருமான வரி பகிர்வு ஏற்பாடுகளை ஆதரித்தல்.
- சபா மற்றும் சரவாக் மலேசியா கூட்டமைப்பின் உறுப்பினர்களாக சட்டப்பூர்வ அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று வலியுறுத்தல். 1963 மலேசிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சபா மற்றும் சரவாக்கின் சிறப்புரிமைகளை நாம் தொடர்ந்து அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும்.
- இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முயற்சிகள்
கோவிட்-19 நோய்த்தொற்று, நாட்டின் நெருக்கடிகளைக் கையாள்வதில் சமூகம் தழுவிய மற்றும் அரசாங்க அளவிலான அணுகுமுறையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சுயநல குறுகிய அரசியலும் மக்களின் வாழ்விலும் பொருளாதாரத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, ஜசெக பின்பற்ற வேண்டியவை:
- குறுகிய அரசியல் நலன்களால் தேசிய முயற்சிகள் நழுவாமல் இருப்பதை உறுதிசெய்து, கட்சிக் கொள்கைகளில் சமரசம் செய்யாமல், நாட்டின் மற்றும் மக்களின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற ஜசெக தயாராக உள்ளது.
- பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிற எதிரணி கட்சிகள்
பக்காத்தான் ஹராப்பான் வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான ஒரே வழி, 15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை காட்ட வேண்டும் என்பதை உணர்ந்து, பின்பற்ற வேண்டியவை:
- ஜனநாயகத்தை நிலைநிறுத்துதல், அனைவருக்கும் நீதி, மலேசியாவின் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் நியாயமான பொருளாதாரம் போன்ற பக்காத்தான் ஹராப்பானின் கொள்கைகளை மீண்டும் வலியுறுத்துவது கூட்டணியின் அடித்தளமாகும்.
- பக்காத்தான் ஹராப்பானில் உள்ள ஜசெக, கேஅடிலான், அமானா மற்றும் அப்கோ போன்ற கட்சிகளை வலுப்படுத்தி ஒன்றிணைக்கவும், அத்துடன் கூட்டணியில் உள்ள உட்பூசல்களைக் களைதல்.
- அடுத்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் பயன்படுத்தும் சின்னமாக ஹரப்பான் சின்னத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டது.
- பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும்/அல்லது பக்காத்தான் ஹராப்பானின் கீழ் அதிகாரபூர்வமாக பாரிசான் அல்லாத கட்சிகளின் பலத்தைத் திரட்டுவதன் மூலம் 'பெரிய கூடாரம்' அணுகுமுறையை நோக்கிய முயற்சிகளை அதிகரித்தல்.